அருள்நிதியின் 'தேஜாவு' வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

11 Jun, 2022 | 11:31 PM
image

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படமான 'தேஜாவு' படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'தேஜாவு'. இதில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்கிறார். 

இவருடன் மூத்த நடிகை மதுபாலா, அச்சுத்குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 

வைட் கார்பட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. விஜய் பாண்டி தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளான ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று 'தேஜாவு' வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அருள்நிதி நடிப்பில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 'டி ப்ளாக்' மற்றும் 'தேஜாவு' ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தளபதி விஜயின் 'லியோ' பட டிரெய்லர்...

2023-10-03 19:41:30
news-image

பரத் - ரகுமான் இணைந்து மிரட்டும்...

2023-10-03 19:43:27
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'டைகர்...

2023-10-03 17:26:57
news-image

சுந்தர் சி நடிக்கும் 'ஒன் 2...

2023-10-03 15:19:17
news-image

பொங்கலுக்கு வெளியாகும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்...

2023-10-03 15:19:54
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட கலையரசனின்...

2023-09-30 20:14:20
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' திரைப்படத்தின்...

2023-09-30 20:11:50
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநரின் பட்டியலில் இடம்...

2023-09-30 20:10:46
news-image

சுந்தர் சி நடிக்கும் 'அரண்மனை 4'...

2023-09-30 20:10:21
news-image

பிரபுதேவா நடிக்கும் 'முசாசி' படக்குழுவினரை சந்தித்த...

2023-09-30 16:22:03
news-image

சந்திரமுகி 2 - விமர்சனம்

2023-09-30 16:21:30
news-image

பிரபாஸ் நடிக்கும் 'சலார்- பார்ட் 1...

2023-09-30 15:08:44