பாகிஸ்தான் 120 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி

Published By: Digital Desk 5

11 Jun, 2022 | 02:28 PM
image

(என்.வீ.ஏ.)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முல்டான் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 120 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.

முதலாவது போட்டியில் 5 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டி இருந்த பாகிஸ்தான் இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்தேச ஒருநாள் தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Imam-ul-Haq reverse sweeps, Pakistan vs West Indies, 1st ODI, Multan, June 8, 2022

இமாம் உல் ஹக், அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகியோர் குவித்த நிதானம் மிக்க அரைச் சதங்கள், மொஹமத் நவாஸின் துல்லியமான பந்துவீச்சு என்பன பாகிஸ்தானின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.

Imam-ul-Haq and Fakhar Zaman run between the wickets, Pakistan vs West Indies, 1st ODI, Multan, June 8, 2022

மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது பக்கார் ஸமான் (17) ஆட்டமிழக்க, இமாம் உல் ஹக், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

அவர்கள் இருவரும் 42 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

Brandon King was deceived and bowled by a Mohammad Nawaz delivery, Pakistan vs West Indies, 2nd ODI, Multan, June 10, 2022

இமாம் உல் ஹக் 72 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்களைவிட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஷதாப் கான், குஷ்தில் ஷா ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களைப் பெற்றனர்.

Mohammad Wasim cleaned up Kyle Mayers after a rapid start, Pakistan vs West Indies, 2nd ODI, Multan, June 10, 2022

பந்துவீச்சில் அக்கீல் ஹொசெய்ன் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அண்டர்சன் பிலிப் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 32.2 ஓவர்களில் 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

Shaheen Afridi struck first for Pakistan, taking out Kyle Mayers, Pakistan vs West Indies, 1st ODI, Multan, June 8, 2022

கய்ல் மேயர்ஸ் (33), ஷமார் புறூக்ஸ் (42), நிக்கலஸ் பூரன் (25) ஆகிய மூவரே 25 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமத் நவாஸ் 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். அத்துடன் மொஹமத் வசிம் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷதாப் கான் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28
news-image

மரித்துப்போன கால்பந்தாட்டத்திற்கு உயிர் கொடுக்க நண்பர்களாக...

2023-03-20 20:53:51
news-image

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா...

2023-03-20 15:14:33
news-image

சிட்டி லீக் 1ஆம் பிரிவு :...

2023-03-20 13:39:27
news-image

டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றார்...

2023-03-20 16:12:31
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள்...

2023-03-20 13:26:54
news-image

இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்திய நியூஸிலாந்து டெஸ்ட்...

2023-03-20 12:09:34