விலை மதிப்பிட முடியாத பொருட்களுடன் முழ்கிய கப்பல் உரிமை கோரி நிற்கும் கொலம்பியாவும் –ஸ்பெயினும்

By Digital Desk 5

11 Jun, 2022 | 12:34 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

கே.ஜி.எப் திரைப்படத்தின்  பாகம் 2 இல் நாயகன் ரொக்கி பல ஆயிரம் டன் தங்கக்கட்டிகளுடன்  கப்பலோடு முழ்குவார். அது போன்றதொரு சம்பவம் 300 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றுள்ளதோ என்று ஆச்சரியப்பட வைத்துள்ளது கொலம்பியாவில் தற்போது எழுந்துள்ள ஒரு சர்ச்சை. 

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கொலம்பியாவின் தலைநகர் போகோட்டோவுக்கு அருகே முழ்கியது.

அப்போது அதில் பயணம் செய்த 600 பேரும் முழ்கி பலியாகினர். 2015 ஆம் ஆண்டில்  அந்த கப்பல் முழ்கிய இடம் கொலம்பியாவால் கண்டு பிடிக்கப்பட்டது. . ஆனால்  குறித்த கப்பல் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை அப்போது உருவாகியுள்ளது. இன்னும் அந்த சர்ச்சை தொடர்கின்றது.  ஏனென்றால் அக்கப்பல் சும்மா முழ்கவில்லை. அதில் பெறுமதி கூற முடியாத இலட்சம் கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.      இதனால் இந்த கப்பல் யாருக்கு உரித்துடையது என்ற பிரச்சினை உருவாகியுள்ளது. 

  1708-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் சான்   ஜோஸ் கப்பல் மூழ்கியது. ஸ்பெயின் –பிரித்தானிய போரின் போது ஆங்கிலேயர்களால் இந்த கப்பல் முழ்கடிக்கப்பட்டது. அந்த கப்பலில் என்ன இருந்தது என்பதை ஆங்கிலேயர்களும் அறிந்திருக்கவில்லை.  அதே வேளை தங்கப்புதையலுடன் ஒரு கப்பல் தமது நாட்டு கடல் எல்லையில் எந்த இடத்தில் முழ்கிக் கிடக்கின்றது என்ற விடயத்தை கொலம்பியாவும் அறிந்திருக்கவில்லை.  

இப்படி இருக்கும் நிலையில் குறித்த  கப்பலை, குறித்த பிராந்தியத்தில்    பல வருடங்கள் தேடிய கொலம்பிய  அரசாங்கம்,  2015 ஆம் ஆண்டு   கண்டு பிடித்தது. அதில் தங்க நாணயங்கள் உட்பட பல பெறுமதிமிக்க பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். அப்போது அதன் பெறுமதியை  1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கணக்கிட்டிருந்தனர்.  கடலில் முழ்கிப்போன வரலாற்றில் பெறுமதிமிக்க புனித புதையலை நாம் கண்டடைந்து விட்டோம் ன அப்போதைய கொலம்பிய ஜனாதிபதி  ஜுவான் மனுவேல்  குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவற்றை மீட்கும் பணிகள்  தாமதமாகின. அது தொடர்பான ஆய்வுகள் தொடர்வதாக ஸ்பெய்ன் அறிவித்தது. இந்நிலையில்  கடந்த 6 ஆம் திகதி குறித்த கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் முழ்கி கிடக்கும் காணொளியை கொலம்பியா  வெளியிட்டுள்ளது. 

 அந்த ஒளிப்பதிவில்  சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கிக் கிடக்கின்றன. அதன் அருகே நீலம், பச்சை நிறங்களில், கடலின் அடியில் சிதறிக் கிடக்கின்ற தங்க நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் பீங்கான் கோப்பைகள் தெரிகின்றன. தவிர, ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் காணப்படுகிறது. கொலம்பியாவானது ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்த நாடாகும். 1810 ஆம் ஆண்டு கொலம்பியா ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்றது. தற்போது அது தனது கடற்பரப்பில் முழ்கிய கப்பல்களை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆராய்ந்து வருகின்றது.

இப்போது இந்த கப்பல்கள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.  மேலதிகமாக முழ்கிய இரு கப்பல்களும் 200 வருடங்களுக்கு முன்பு ஸ்பெயினிடமிருந்து சுதந்திரத்தைப் பெற யுத்தம் செய்த எமது கப்பல்கள் என கொலம்பியா கூறுகின்றது.  ஆனாலும் இது தற்போது தொல்பொருளியல் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொலம்பியா கூறுகின்றது. எனினும் சான் ஜோஸ் கப்பல் முழ்கும் போது தமது நாட்டுக்கு உரித்துடையதாக இருந்ததால் கப்பல் உட்பட அதில் உள்ள அனைத்தும் தமக்கே சொந்தமாக வேண்டும் என ஸ்பெயின் கூறுகின்றது. இதற்கு ஸ்பெயின் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் ஆதிக்கம் மற்றும் முழ்கிய பொருட்கள்  தொடர்பான சரத்துக்களை உதாரணம் காட்டியுள்ளது. 

உண்மையில் சான் ஜோஸ் சுமந்து சென்று தங்கங்கள்,மாணிக்கக்கற்கள் மற்றும் விலை உயர்ந்த மட்பாண்டங்களின் பின்னணி சுவாரஸ்யமானது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்காக 1700 களில் இலத்தீன் அமெரிக்க காலனித்துவ நாடுகள் ஸ்பெயினை நாடியிருந்தன. குறித்த நாடுகள் தம்மிடையே சேகரித்த தங்கம்,வெள்ளி, மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களை குறித்த கப்பலில் ஸ்பெயின் மன்னருக்கு அனுப்ப திட்டமிட்டு அவ்வாறே நடந்தது. ஆனால்  ஸ்பெய்ன் கொலம்பிய கடற்பரப்பில் கார்டஜீனா என்ற துறைமுக நகருக்கு அருகாமையில் இக்கப்பலை பிரித்தானியா தாக்கி முழ்கடித்தது. 

மதிப்பிட முடியாத தங்கங்களை சுமந்து முழ்கிப்போயுள்ள இக்கப்பலின் துல்லியமான இருப்பிடத்தை கொலம்பியா தெரிவிக்காது என்று கடற்படையினர் கூறியுள்ளனர். இது கடற்கொள்ளையர்கள் அல்லது ஏனையோரின் கவனத்தை திசை திருப்பும் என்பது முக்கிய விடயம். எனினும்  இது மனித குல வரலாற்றில் முழ்கிய விலை மதிப்பிட முடியாத தேசபக்தியின் கண்டு பிடிப்புகள் என வர்ணித்துள்ளார் கொலம்பிய ஜனாதிபதி இவான் டியூக். 

முன்னாள் ஜனாதிபதி மனுவேல் 2015 ஆம் ஆண்டில், ‘கார்டஜீனா துறைமுக நகரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இக்கப்பலில் உள்ள அனைத்தும் தேசிய பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்’ என்றார்.  ஆனால் கடலில் முழ்கிய கப்பல் மற்றும் அது சார்ந்த இடிபாடுகளின் உரிமையானது நீண்ட கால சட்டப்போராட்டத்துடன் தொடர்புடையது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right