(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சியில்  தீபாவளி திருநாளான நேற்று  இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல் , மதுபோதை  மற்றும்  தனிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமான கைகலப்புக்களில்  நேற்றயதினம்  வாள்வெட்டுக்கு இலக்காகி  கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில்  நான்குபேர்    அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தீபாவளி தினமான நேற்று  மாலை எட்டு  மணியில் இருந்து இரவு பத்து மணிவரையிலான இரண்டு  மணிநேரத்தில் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல் , மதுபோதை  மற்றும்  தனிப்பட்ட பிரச்சனைகளில்  காயமடைந்தவர்களே  இவ்வாறு  சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறித்த  வாள்வெட்டு சம்பவங்கள் கிளிநொச்சி  கோணாவில் ,பாரதிபுரம் ஊற்றுப்புலம் ,செல்வாநகர் ஆகிய பகுதிகளில்  இடம்பெற்றுள்ளதாகவும்  குறித்த சம்பவங்கள் தொடர்பான  விசாரணைகளை  கிளிநொச்சி பொலிஸ்  நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.