பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை - அதிகாரியுடனான பேச்சுவார்த்தையையடுத்து கலைந்து சென்றனர்

Published By: Digital Desk 4

10 Jun, 2022 | 09:24 PM
image

(எம்.மனோசித்ரா)

பல்கலைக்கழக மாணவர்களால் கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்றைய  தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ருஹூணு மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்துமாறும் , சில மாணவர்களின் உறுப்புரிமை நீக்கப்படுவதை தடுக்குமாறும் கோரி இன்று  வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் பலவந்தமாக கல்வி அமைச்சிற்குள் நுழைய  முற்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டாக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை தாண்டி இசுருபாயவிற்குள் செல்ல முயற்சித்தனர்.

ஆர்ப்பாட்டாக்காரர்கள் பல தடவைகள் இசுருபாயவிற்குள் நுழைய முயற்சித்த போதிலும் அதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக இதன்போது பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருகை தந்த நிலையில் ஆர்ப்பாட்டாக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் மீண்டும் பொலிஸார் தலையிட்டு ஆர்ப்பாட்டாக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்காக சென்றனர்.

இரண்டு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேச்சுவார்த்தையின் நிறைவில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-15 18:15:27
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-15 18:17:43
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-15 18:58:16
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58