லண்டன் மலையக இலக்கிய மாநாடு தொடரவேண்டும் - எச். எச். விக்கிரமசிங்க 

10 Jun, 2022 | 07:48 PM
image

“நாங்கள் லண்டனுக்கு வந்திருந்த போது, மலையகத்தின் மறைந்த எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரம் புலம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழர்கள் அனைத்துலக ரீதியில் ஓர் அமைப்பாக உருப்பெற வேண்டும் என்று மு.நித்தியானந்தனுடன் லண்டனில் பலதடவைகள் கலந்துரையாடி இருந்தார். 

அனைத்துலக ரீதியில் அத்தகைய அமைப்பு உருவாக இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்று கூறத்தெரியவில்லை. ஆனால், அத்தகைய அமைப்பிற்கு லண்டனில் நடைபெறும் 'மலையக இலக்கிய மாநாடு' ஒரு அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை.” என்று பதிப்பாளரும் மலையக ஆய்வாளருமான எச். எச். விக்கிரமசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு 1996, 1997 ஆம் ஆண்டுகளில் கண்டியில் சிறப்பாக நடைபெற்று, அம்மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகள் ஒரு தொகுதியாகவும் வெளியிடப்பட்டது.

அம்மாநாடு நடந்து இன்று 25 ஆண்டுகள் கடந்து போய்விட்டன. ஆனால், அதன் தொடர்ச்சி பேணப்படவில்லை. 

இன்றோ இலங்கைச் சூழல் மிக துயரமான கட்டத்தை அடைந்து விட்டநிலையிலும், லண்டனில் இம்மாநாடு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறுவது மலையக இலக்கியவாணர்களுக்கும், இலக்கியச் சுவைஞர்களுக்கும் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

மிகச் சிறந்தமுறையில் திட்டமிடப்பட்டு, முறையாக நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆற்றல்மிக்க விமர்சகர்களை உள்வாங்கி, ஐரோப்பா தழுவிய நிலையில் இம்மாநாடு நடைபெறுவது சரித்திர முக்கியத ;துவம் வாய்ந்ததாகும்.

இலங்கையிலிருந்து பல நூல்களை எழுத்தாளர்களிடமிருந்து சேகரித்து லண்டனுக்கு அனுப்பி வைக்கும் பொழுதில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் காட்டிய அக்கறையினை நேரில் பார்த்து அனுபவித்தேன். பாரபட்சமின்றி மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று அனைவரையும் அனைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இம்மாநாட்டு ஒழுங்கு முறை பெரிதும் பாராட்டிற்குரியதாகும்.

இலக்கிய நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அதே வேளை, ஓவியர் கே.கிருஷ்ணராஜா மலையகத்தில் 2019 ஆம் ஆண்டு நிகழ்த்திய ஓவியப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட ஓவியங்களைப் பேணி இம்மாநாட்டில் மலையக ஓவியக் கண்காட்சியை நிகழ்த்தவிருப்பது மிகப்பெருஞ் சிறப்பாகும்.

கோ.நடேசய்யர் நடத்திய 'வர்த்தகமித்திரன்' பத்திரிகை உட்பட நூற்றுக்கணக்கான மலையக நூல்களும், சஞ்சிகைகளும் காட்சிக்கு வைக்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியுற்றேன். உலக அரங்கில் மலையக இலக்கியம் பேசப்படுவதற்கு இம்மாநாடு முக்கிய புள்ளியாக அமையும் என்று நம்புகிறேன்.

இம்மாநாட்டினை நடத்துவதற்கு முன்னின்றுழைக்கும் லண்டல் விம்பம் அமைப்பினருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியன.

விம்பம் அமைப்பினர் மலையக இலக்கிய மாநாட்டினை இனிவரும் ஆண்டுகளிலும் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05