தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரானார் தம்மிக பெரேரா, பவித்திராவிற்கு அமைச்சுப்பதவிகள்

By Vishnu

10 Jun, 2022 | 09:48 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

பஷில் ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து அந்த வெற்றிடத்திற்கே தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயரை பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ரீ.டீ.ஹேரத் , தேசிய பட்டியலின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஷில் ரோஹண ராஜபக்ஷ பதவி விலகியமையின் காரணமாக, வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு 1981 (01) ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்திற்கமைய குலப்பு ஆரச்சிகே தொன் தம்மிக பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள தம்மிக பெரேரா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியொன்றை பெறவிருப்பதாக தெரியவருகிறது.

அதற்கமைய தம்மிக பெரேரா சகல நிறுவனங்களினதும் இயக்குனர் சேவை குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார். இவர் தொழிநுட்பம் மற்றும் முதலீட்டு அமைச்சராக நியமனம் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சி மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இரண்டு அமைச்சுகளுக்கான விடயதானங்கள் திருத்தப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அதற்கமைய தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு , மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41
news-image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில்...

2022-10-05 12:24:53
news-image

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹசிம்...

2022-10-05 12:58:17
news-image

இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு...

2022-10-05 12:10:30
news-image

தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்...

2022-10-05 12:02:41
news-image

உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில்...

2022-10-05 12:15:18
news-image

போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளரை இடமாற்றக்...

2022-10-05 12:42:47
news-image

பல்கலைக்கழகங்களில் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன -...

2022-10-05 11:30:12
news-image

சிறுவர் தினத்தன்று மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம்

2022-10-05 11:24:46
news-image

அடக்குமுறை தொடர்ந்தால் ஆட்சியிலிருந்து விரைவில் வெளியேற...

2022-10-05 11:28:33
news-image

வெளியானது எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பான...

2022-10-05 12:35:42