தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து அதாவது நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் வீதியின் ஓரத்தில் இன்று (10) சிசுவின் சடலம் ஒன்று லிந்துலை பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அப்பகுதியில் சென்ற சிலர் சிசுவின் சடலத்தை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM