நிர்ணய விலையை மீறி அரிசியை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - யாழ். அரசாங்க அதிபர் மகேசன்

Published By: Vishnu

10 Jun, 2022 | 01:24 PM
image

யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (10.06.2022) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ள நிலை காணப்படுகின்றது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில்  வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில்  பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது அந்த நிர்ணயவிலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களினை விற்கவேண்டும்

சில்லறை விற்பனையாளர்களும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும் அரிசியை  அதிக விலைக்கு விற்று பாவனையாளர்களை அதிக கஷ்டத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என  கேட்டுக் கொள்கின்றோம்.

அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது நியாயமான விலையாக  காணப்படுகின்றது அதே நேரத்தில் எதிர்காலங்களில் யாழில்   பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

யாழ் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரின்  கண்காணிப்பின் மூலம் கட்டுப்பாடுவிலையினை  மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்

 எனவே பொதுமக்களுக்கு கஷ்டம்  ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும்...

2024-09-18 03:33:03
news-image

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு;...

2024-09-18 03:06:28
news-image

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை...

2024-09-18 03:18:02
news-image

51/1 தீர்மானத்தின் ஊடாக உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு...

2024-09-18 03:01:51
news-image

புதிய ஜனாதிபதி இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை...

2024-09-18 02:04:31
news-image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின்...

2024-09-18 00:57:43
news-image

நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு...

2024-09-17 21:34:58
news-image

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன...

2024-09-17 21:05:09
news-image

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து...

2024-09-17 22:49:09
news-image

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று...

2024-09-17 21:02:10
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய...

2024-09-17 20:55:29
news-image

நோயாளி குணமடைந்து வரும் நிலையில் வைத்தியரை...

2024-09-17 21:26:06