சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By Digital Desk 5

10 Jun, 2022 | 12:30 PM
image

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'பிரின்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் கே. வி. அனுதீப் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பிரின்ஸ்'. இதில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக உக்ரேனிய நாட்டு நடிகை மரியா ரியாபோஸ்க்வா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சத்யராஜ், நவீன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ். எஸ். தமன் இசையமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் எல் எல் பி என்ற நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு 'பிரின்ஸ்' என பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் சிவகார்த்திகேயன் கையில் உலக உருண்டை ஒன்றை வைத்துக்கொண்டு, உலகத்திற்கு பாடம் கற்பிப்பது போல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் படத்தின் தலைப்புக்கு கீழே 'யாதும் ஊரே ..' எனும் வாசகத்தை எழுதியும், அதற்குக் கீழே ஏராளமான கைகளில் பல உலக நாடுகளின் கொடிகளை இடம்பெற வைத்தும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

'டாக்டர்', 'டான்' என வரிசையாக இரண்டு பிரம்மாண்டமான வசூல் வெற்றியை வழங்கிய சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' வெளியாகவிருக்கிறது.

இந்த படமும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை அவர் அடிக்க கூடும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right