இராகலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ; இளைஞன் பலி

Published By: Digital Desk 3

10 Jun, 2022 | 11:00 AM
image

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் சந்தி ஹைபொரஸ்ட் பிரதான வீதியில் இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து நேற்று (09) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மாகுடுகலையை சேர்ந்த 26 வயதுடைய ஞானபீட சமன்குமார என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் காட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹைபொரஸ்ட் மாகுடுகலை தோட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இராகலையிலிருந்து புரூக்சைட் சந்தி ஊடாக மாகுடுகலை தோட்டத்தை நோக்கி பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் சில்வர்கண்டி தோட்டத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் பயணித்த வேளையில் ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலையை நோக்கி பயணித்த லொறி ஒன்றில் உந்துருளி மோதுண்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் லொறியில் மோதுண்ட நிலையில் வீசி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த இளைஞர்களை சில்வர்கண்டி தோட்ட பொது மக்கள் நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

கிளிநொச்சி கடற்பரப்பில் 78 கிலோ போதைப்பொருள்...

2026-03-17 14:48:13
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02