விமானத்தில் இந்தியா சென்ற இலங்கையர் அகதியாக பதிவு செய்ய படகில் வந்ததாக கூறி நாடகம்

Published By: Digital Desk 4

10 Jun, 2022 | 06:01 AM
image

தமிழகத்தின் இராமேஸ்வரத்தையடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மெரைன் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மெரைன் பொலிஸார் அவரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறி வந்ததோடு அவர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைய வந்தாரா? அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல தனுஷ்கோடி தீடை பகுதிக்கு சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீடை பகுதிக்கு சென்றாரா? என பல்வேறு கோணங்களில் மெரைன் பொலிஸார், கியூ பிரான்ச் பொலிஸார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த தீடை பகுதியில் கடல் பகுதியில் கடல் நீரில் நனைந்த படியே தஞ்சம் அடைந்து இருந்தால் அகதியாக வந்து இருக்கிறார் என்று பொலிஸார்அழைத்து சென்று மண்டபம் அகதிகள் முகாமில் அடைத்து விடுவார்கள் என்ற நோக்கத்தோடு தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதையடுத்து மெரைன், கியூ பிரான்ச்  பொலிஸாரின், மத்திய புலனாய்வுத் துறையின்  விசாரணையில் அவர் விசா மூலம் இலங்கை கொழும்பில் இருந்து சென்னை சென்று பின்னர் அங்கிருந்து மதுரை சென்றடைந்து இன்று காலை இராமேஸ்வரம் சென்றுள்ளார்.

தற்போது அவரிடம் முழு விசாரணை நடத்தியதில்  விசா மூலம் சென்றமை உறுதியானதை அடுத்து அவருடைய விசாவின் கால அவகாசம் இன்னும் 90 நாட்கள் உள்ளது.

இந்த நிலையில் மத்திய புலனாய்வுத் துறையினர் இலங்கையில் இருந்து விசா மூலம் வந்தவரிடம்  நடத்திய   விசாரணையில் அவர் இலங்கை திருகோணமலை பகுதியில் கடந்த 2012 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை காவல் துறையில் பணியாற்றி வந்தமை தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் தனது பணியை விருப்ப ஓய்வு கேட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் விசா மூலம் தமிழகம் வந்த இலங்கையை சேர்ந்த தினேஷ் காந்த் என்பவர் தமிழகப் பகுதிகளில் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு துறையினர் 5 மணி நேரம்  தீவிரமாக விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் முறையான ஆவணங்கள் வைத்துள்ளதை அடுத்து  சந்தேகப்படும் படியாக வெளியிடங்களில் சுற்றக் கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 14:45:23
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03