மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை : மாற்று மருந்துகளின் கையிருப்பு போதியளவு உள்ளது - சுகாதாரப் பிரிவு

By Vishnu

09 Jun, 2022 | 09:34 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் அத்தியாவசிய மருந்து வகைகளின் கையிருப்பு குறைவாக காணப்படுகின்ற போதிலும், அவற்றுக்கான மாற்று மருந்துகளின் கையிருப்பு போதியளவு உள்ளது.

எனவே அது குறித்து  பொது மக்கள் வீணாக அச்சமடையவோ குழப்பமடையவோ தேவையில்லை என  சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது 

மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறாமல் அத்தியவசிய மருந்துகளை மருந்தகங்களில்  கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும், கொழும்புக்கு வெளியே உள்ளவர்கள் கொழும்புக்கு வருவதை தவிர்த்து தத்தமது பிரதேசங்களுக்கு அண்மையில் உள்ள  வைத்தியசாலைகளுக்கு செல்லும்படியும்  சுகாதாரப் பிரிவு பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை அரச வைத்தியசாலைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற காரணத்தினால்  மருந்தகங்களில்   கூடிய காலத்திற்கு மருந்துகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

மருந்துகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு சரியான வெப்பநிலை தேவை என்பதுடன், எதிர்காலத்தில் உங்களுக்கான மருந்துகள் மாறவும் கூடும். ஆகவே, மருந்துகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும்,நோயாளர்கள் தங்களது மாதாந்த சிகிச்சை களுக்கு வருவதை நிறுத்தாமல், தவறாது வருகைதரும்படியும், வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும்படியும்  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உப்புல் திஸாநாயக்க பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  அவர் மேலும் கூறுகையில் ;

உண்மையில், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான சத்திர சிகிச்சைகளை குறித்த திகதிகளில் நடத்துவதை நாம் பிற்போட மாட்டோம். எனினும், சாதாரண நோய்களுக்கான சத்திர சிகிச்சைகள் பிரிதொரு தினத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கான சிகிச்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது கட்டாயமாகும். அத்துடன் நீரிழிவு, கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்த நோய்களை உடையவர்கள் கட்டாயமாக பரிசோதனை செய்து கொள்வது சிறந்து.

மேலும், அதற்கான மருந்துகளை தவறாது உட்கொள்ளவதன் மேலும்  பாரிய நோய்த் தாக்கத்திலிருந்து தப்ப முடியும்.  மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், அவற்றுக்கான மாற்று மருந்துகள் எம்மிடம் உண்டு.

மேலும், மருத்துவர்களை  ஆலோசனைகளை பெறாமல் எந்தவொரு மருந்தையும் எடுப்பதை கட்டாயம் தவிர்க்கும்படி நரம்பியல் சம்பந்தமாக விசேட வைத்திய நிபுணர் தர்ஷண சிறிசேன தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் மாதாந்த க்ளீன்களுக்கு வருகை தரும் வெளி மாவட்ட நோயாளர்கள் தத்தமது பிரதேசங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு  மருத்துவ ஆலோசனைகளையும் மருந்துகளையும் பெற்றுக்கொள்ளுங்கள். மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவசக் கல்வியை பெற்ற நாம் மக்களுக்கு உதவி செய்வதில் ஒருபோதும் பின்னிற்பதில்லை.

சிறுவர்களுக்கான திரவ மருந்துகள் (சிரப்) தட்டுப்பாடு காணப்படுகிறது. சிறுவர்களது நோய்களை குணப்படுத்தும் மருந்து  வில்லைகளை தூளாக்கி அவர்களுக்கு பருகக் கொடுங்கள்.  பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை.

அவற்றில் எந்தவித பிரச்சினையும் இல்லை. நாட்டில் அத்திவசிய மருந்து வகைகளின் கையிருப்பு குறைவாக காணப்படுகின்ற போதிலும், அவற்றுக்கான மாற்று மருந்துகளின் கையிருப்பு போதியளவு கையிருப்பில் உள்ளது. ஆகவே, பொது மக்கள் வீணாக அச்சமடையவோ குழப்பமடையவோ தேவையில்லை என இலங்கை வைத்தியர்கள் சங்கத்திக் உப தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான சுரந்த பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41