அரச நிதிதொடர்பான குழுவின் தலைவர் பதவிக்கு திருட்டுத்தனமாக ஆளும் தரப்பில் இருந்த ஒருவரின் பெயர் -    கிரியெல்ல சபையில் வாக்குவாதம் 

Published By: Vishnu

09 Jun, 2022 | 09:46 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில்  ஏற்பட்டுள்ள  அரசியல் பிரச்சினைகளுக்கு  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் காரணமாகும். நாங்கள் இல்லாத நேரத்தில்  அரச நிதிதொடர்பான குழுவின் தலைவர் பதவிக்கு திருட்டுத்தனமாக ஆளும் தரப்பில் இருந்த ஒருவரின் பெயர் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.

இது பாரிய சதித்திட்டம். அதுதொடர்பில் சபாநாயகர் வெட்கப்படவேண்டும் என தெரிவித்ததால் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அத்துடன் சபையில் எடுத்த தீர்மான்தை  நீங்கள் தெரிவிப்பது போல் மாற்ற முடியாது என சபாநாயகரும் கடும் தொனியில் பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் 09 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் தெரிவு தொடர்பில் எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்தை முன்வைக்கையிலேயே  சபாநாயகருக்கும்  அவருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தின்  அரச நிதி தொடர்பான குழுவின்  தலைவராக எதிர்கட்சி உறுப்பினர் இருக்கவேண்டும் என நிலையியற் கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் , ஐக்கிய மக்கள் சக்தியின்  எம்.பி.யான  ஹர்ச டி சில்வாவின் பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது.

 எனினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, அரசியல் ரீதியாக செயற்பட்டு, நாங்கள் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், தலைவர் பதவிக்கு அரச தரப்பின் எம்.பி.யான அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது பாரிய தவறு. நீங்கள் அந்த ஆசனத்தில் இருந்துகாெண்டு அரசியல் செய்து வருகிறீர்கள். நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு நீங்களும் காரணமாகும்.

ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரதமர், அமைச்சரவை பதவி விலகியது. ஆனால் நீங்கள் இன்னும் அந்த ஆசனத்தில் இருந்துகொண்டு தியானம் செய்து வருகிறீர்கள்.

உங்களின் நடவடிக்கை தொடர்பாக வெட்கப்படுகின்றோம். அதனால் இந்த பெயரை மாற்றி நாங்கள் பிரேரித்த ஹர்ஷடி சில்வாவை நியமிக்கவேண்டும் என்றார்.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத சபாநாயகர். இது குறித்து கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடமுடியும். அவ்வாறு இல்லாமல் நீங்கள் தெரிவிப்பது போல் செயற்டப முடியாது என்றார்.

எனினும் மிகவும் ஆவேசமடைந்த நிலையில் காணப்பட்ட லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, வெலிகம பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் இணைப்பாளராக இன்னும் செயற்படுகிறார். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இடம்பெற்றும் இன்னும் சபாநாயகர் பாடம் படிக்கவில்லை என்றார். இதன்போது, இருவருக்கும் இடையில் கடும் தர்க்கம் இடம்பெற்றது.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான ஹர்ச டி சில்வா, அரச நிதி தொடர்பான  குழுவின்  தலைவராக எதிர்கட்சி உறுப்பினர் இருக்கவேண்டும் என்பதே அடிப்படை.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் பொருளாதாரம் தொடர்பாக கொஞ்சமாவது அறிவு இருப்பதால், அதன் தலைவர் பதவியை வழங்குமாறு தெரிவித்திருந்தேன்.

நாட்டுக்கு சேவை செய்ய அமைச்சு பதவு எடுக்க தேவையில்லை. அபிவிருத்தி சமத்துவம் பாராளுமன்றத்துக்கு வழங்கியிருந்தால் இந்த பிரச்சினை நீடித்திருக்காது. ஏன் நாங்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோம். பிரதமரிடம் இதனை நான் தெரிவித்திருந்தேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார். அப்படியானால் ஏன் செய்யவில்லை என்றார்.  

அதனைத்தொடர்ந்து எழுந்த தயாசிறி எம்.பி. அரச நிதி தொடர்பான குழுவின் தலைவராக எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இருக்கும் அநுர பிரியதர்ஷ்ன யாப்பா இருந்து வருகின்றார். அவர் சிறந்த முறையில் செயற்படுகின்றார். அவரை மாற்ற வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுப்போம். ஹர்ஷ் பிரதமருடன் எவ்வாறான ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளார் என எமக்கு தெரியாது என்றார்.

மீண்டும் எழுந்த ஹர்ஷ எம்.பி. அநுரயாப்பா அரசாங்கத்தில் இருக்கும்போதுதான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். தற்போது எதிர்க்கட்சியில் இருக்கிறார். நாளை எங்கு இருப்பார் என எமக்கு தெரியாது. பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்றத்துக்கு வந்தவர். அப்படியாயின் எப்படி அவர் அந்த பதவிக்கு நியமிக்க முடியும் என கேட்கின்றோம் என்றார் 

இதனையடுத்து  எழுந்த சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த எம்.பி யான அநுர பிரியதர்சன யாப்பா, நான்  அரச தரப்பில் இருந்தபோது   இக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டேன் , இப்போது கூட புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் எனது பெயர் பிரேரிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் அதனை நிராகரித்து விட்டேன். தற்போது நான் எதிர்கட்சியில் தான் இருக்கின்றேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இது கட்சி சார்ப்பற்ற அரசாங்கம். இந்த அரசாங்கத்தில் புதிய குழு முறைமைமை ஒன்றை ஏற்படுத்த இருக்கின்றோம். அந்த தீர்மானத்தின் அமைவாகவே அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷ எம்.பியின் பெயர் பிரேரிக்கப்பட்டது. தற்போதும் அவரது பெயர் அந்த குழுவில் இணைக்கப்படவும் இல்லை. நீக்கப்படவும் இல்லை.

ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு ஆதரவளிப்பதாக யாருக்கும் தெரிவிக்க முடியும். ஆனால் இடுப்பில் பலம் இருப்பவர்களுக்கே பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியும். அதனால் குறுகிய அரசியல் நோக்கத்தில் செயற்டக்கூடாது. ஆதரவளிப்பதும் பொறுப்பு ஏற்றுக்கொள்வதிலும் வித்தியாசம் இருக்கின்றது என்றார்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் சபையை கட்டுப்படுத்தி, சபையை தொடர்ந்து கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04