உயர்மட்ட  சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.   

சிறுநீரக நோய் தொடர்பான ஓர் ஆய்வினை முன்னெடுக்கும் நோக்கிலேயே இந்த குழு இலங்கை வருகிறது.  இது தொடர்பான  நிபுணர்களைக் கொண்ட குழுவே  டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.  

இலங்கையில் 12 மாவட்டங்களில் சிறுநீரக நோய்  அதிகரித்து  காணப்படுவதுடன் வடமத்திய மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.