அரசியல், வியாபாரத்தை முன்னெடுக்கும் வகையில் நிறுவனத்தை வழிநடத்தினால் இந்தியாவின் கௌரவத்திற்கு பாதிப்பு - சம்பிக்க

By Vishnu

09 Jun, 2022 | 10:07 PM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது. இதற்குள் அரசியல் மற்றும் வியாபாரத்தை முன்னெடுக்கும் வகையில் நிறுவனத்தை வழிநடத்தினால் அது இந்தியாவின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் .

புதுப்பிக்கத்தக்க சக்தி வள அபிவிருத்தி செயற்திட்டத்தை பிறநாட்டின் தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சியினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என 43ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை  வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த மின்சார சட்டதிருத்த மூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2002ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபை  சட்டம் திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.இருப்பினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்,இலங்கை மின்சார சபை ஆகியவற்றை கண்காணிக்கும் அதிகாரம் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவில்லை.

2009 ஆம் ஆண்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலையீட்டுடன் மின்சாரம் சட்டம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு  மின்சார சபையினை கண்காணிக்கும் அதிகாரம்  இலங்கை பொதுப்பயன்பாட்டு ,ஆணைக்குழு விற்கு வழங்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு  மின்சார சட்டம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது.மின்னுற்பத்திகள் தொடர்பிலான போட்டித்தன்மை, அரசாங்கங்களுக்கிடையிலான மின்னுற்பத்தி , அவசரகாலத்திற்கான மின்கொள்வனவு உள்ளிட்ட பிரதான விடயங்கள் குறித்த திருத்தத்தில் உள்வாங்கப்பட்டன.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் நாட்டில் மின்விநியோக கட்டமைப்பு பாரிய நெருக்கடியினை எதிர் கொண்டுள்ள வேளையில் மின்சார சட்டம் தொடர்பிலான திருத்தச்சட்டமூலம்  8 ஆம் திகதி புதன் கிழமை நேற்று சபையில் முன்வைக்கப்பட்டது.

இந்த திருத்தச்சட்டமூலத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பங்குடைமை முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 10 மெவாவோட் மின்னுற்பத்தி என்ற வரையறை நீக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தினால் சிறு மற்றும் நடுத்தர மின்னுற்பத்தியாளர்கள்பாதிக்கப்படுவதுடன்,போட்டின்னத்மை இல்லாமல் பெரும்  உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மின்னுற்பத்தி அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் இந்தியாவின் அதானி நிறுவனம் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி நாட்டில் 6000 மெகாவோட் மின்னுற்பத்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளது. நாட்டின் அதிக பட்ச மின்னுற்பத்திக்கான கேள்வி 2700 மெகாவோட் அலகாக காணப்படுகிறது.

நாட்டின் தேசிய  புதுப்பிக்கத்தக்க சக்தி வள செயற்திட்டத்தை தனி இந்திய நிறுவனத்திற்கு வழங்கினால்  நாட்டின் மின்னுற்பத்திக்கான போட்டித்தன்மை பாதிக்கப்படுவதுடன்,மின்நிலையங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி வள செயற்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்க தயாராகவுள்ளோம் .இருப்பினும் இச்சட்டமூல திருத்தம் ஊடாக நாட்டின் சிறு மற்றும் நடுத்தர மின் உற்பத்தியாளர்களை  முடக்கி நாட்டின் மின் உற்பத்தியின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி,  பிற நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு  மின்னுற்பத்தியை வழங்குவது பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

நெருக்கடியான நிலைமையை எதிர்கொண்டுள்ள போது இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி எமது கௌரவத்தை பெற்றுள்ளது.இதனூடாக அரசியல் மற்றும் வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க  நிறுவனத்தை வழிநடத்தினால் அது இந்தியாவின் புகழுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

சுயாதீனமாக செயற்படும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு...

2022-09-30 09:37:02
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:20:17
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50