பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி அலரி மாளிகை முன்பாக மைனா கோ கம மற்றும் காலி முகத்திடல் அருகே இடம்பெற்ற கோட்டா கோ கம எனும் பெயர்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தன்னை கைது செய்ய, சி.ஐ.டி.யினர் முயற்சிக்கும் நிலையில், அதனை தடுத்து எழுத்தாணை ( ரிட்) ஒன்றை பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று இரவு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அவரை கைதுசெய்வதற்காக நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் கைது செய்யப்படாத நிலையில் இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM