ஐக்கிய மக்கள் சக்தி எனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை - சம்பிக்க

By Rajeeban

09 Jun, 2022 | 02:31 PM
image

ஐக்கிய மக்கள் சக்தி தனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

மாற்று சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி விளங்கும் என்ற தனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என அவர் செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியிலும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிலும் காணப்பட்ட பலவீனங்கள் காரணமாக மாற்றுசக்தியொன்றிற்கான தேவை காணப்பட்டது எனினும் ஐக்கிய மக்கள் சக்தி எனது எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்னை கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அழைத்தது ஆனால் நான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளேன்,ஐக்கிய மக்கள் சக்தி எதிரியில்லை ஆனால் ஒரு நண்பன் என அவர் தெரிவித்துள்ளார்.

பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவது உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டங்கள் குறித்து எனது 43வது பிரிகேட் உன்னிப்பாக அவதானிக்கும் நான் அரசாங்கத்தில் இணையமாட்டேன் என சம்பிக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right