இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் 100 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வற் வரி அதிகரிப்பினால் குறித்த விலையேற்றத்தை அமுல்படுத்த எண்ணியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விலையேற்றம் தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கலந்துரையாடவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.