கொழும்பு - பஞ்சிகாவத்தையில் பொலிஸ் அதிகாரியை தாக்கியதாக இளைஞன் கைது - துப்பாக்கி, தோட்டாக்களும் மீட்பு

Published By: Digital Desk 4

09 Jun, 2022 | 08:38 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 

அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 9 ஆம் திகதி நாடெங்கும் பதிவான வன்முறைகளில்,  கொழும்பு 10, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் - பஞ்சிகாவத்தை பகுதியில் வைத்து உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி, அவர்களது வாகனங்களை சேதப்படுத்தி, அதற்கு தீ வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான  சம்பவம் குறித்து மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

வெள்ளவத்தையில் கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக  சிக்கினர் | Virakesari.lk

 

இந்த சம்பவத்தின் போது, வன்முறையாளர்கள் பொலிஸ் அத்தியட்சரின் கடமை நேர துப்பாக்கியை கொள்ளையடித்து சென்றுள்ளமை தொடர்பிலான தகவல்கள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில் புதன்கிழமை ( 8) சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயது இளைஞன் ஒருவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.

 புறக்கோட்டை, கொழும்பு 11,  லக்ஷன வீட்டுத் தொகுதியை சேர்ந்த குறித்த இளைஞனின் பொறுப்பில் இருந்து, தாக்குதலின் போது கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின்  கடமை நேர துப்பாக்கியையும் சி.ஐ.டி.யினர் மீட்டுள்ளனர்.

 ப்ரவ்னின் ரக கைத்துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்களும்,   சி.ஐ.டி.யினரால் மீட்க்கப்பட்டுள்ளன.

 இந் நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரை புதன்கிழமை ( 8) மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் சி.ஐ.டி.யினர் ஆஜர் செய்ததை அடுத்து அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

முன்னதாக இந்த விவகாரத்தில், விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி.யினர் அச்சம்பவம் தொடர்பில்  கடந்த மே 22 ஆம் திக்தி மருதானை பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து,   பொலிஸ் அத்தியட்சரின் காரிலிருந்து   கழற்றி எடுக்கப்பட்டதாக  நம்பப்படும் உதிரிப் பாகம் ஒன்றினை ( பபர் )சி.ஐ.டி.யினர் கைப்பற்றியிருந்தனர்.

மே 9 ஆம் திகதி  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் ( டி.ஐ.ஜி.), பொலிஸ் அத்தியட்சர் ( எஸ்.பி.) ஒருவரும் பயணித்த பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான  இரு கார்கள் ,  பஞ்சிகாவத்தை சுற்று வட்டம் அருகே ஒன்றுகூடியிருந்தோரால் நிறுத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அதில் பயணித்த குறித்த இரு உயர் பொலிஸ் அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளதுடன், அதில் காயமடைந்த   பொலிஸ்  அத்தியட்சர் இன்னும் பொலிஸ் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவ்வாறான நிலையில், வாகனங்களை  சேதப்படுத்திய பின்னர், அங்கிருந்த வன்முறையாளர்கள், வாகனத்தின் பாகங்களை கழற்றி எடுத்துவிட்டு எஞ்சிய பகுதிக்கு தீ வைத்துள்ளனர்.

 இது குறித்து  மாளிகாவத்தை பொலிசாரும் கொழும்பு மத்தி வலய குற்றத் தடுப்புப் பிரிவும் விசாரணைகளை நடாத்தி வந்த நிலையிலேயே பொலிஸ்  மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அவ்விசாரணைகள் சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது...

2025-04-19 17:50:52