கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்த போதும் மஹிந்த இதுவரை ஒப்படைக்கவில்லை

Published By: Digital Desk 4

08 Jun, 2022 | 10:08 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் அவர் அதனை ஒப்படைக்கவில்லை என நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

சிறீதரன் எம்.பி.யின் கோரிக்கை உடனே நிறைவேற்றுமாறு பணித்தார் பிரதமர் |  Virakesari.lk

 சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன இதனை இன்று கோட்டை நீதிவான்  திலின கமகேவுக்கு அறிவித்தார்.

அத்துடன்  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும்,  ரேனுக பெரேராவும், மஹிந்த கஹந்தகமவும்  தமது கடவுச் சீட்டுக்கள்  தமது வீடுகள் மீதான தாக்குதல்களின் போது அழிவடைந்துவிட்டதாக சி.ஐ.டி.க்கு அறிவித்துள்ளதாகவும், சனத் நிசாந்தவின் கடவுச் சீட்டு சிலாபம் நீதிமன்றில், வழக்கொன்று தொடர்பில்  பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக் சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன குறிப்பிட்டார்.

 அத்துடன், கடவுச் சீட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்ட  இரு சாட்சியாளர்களும்  அதனை ஒப்படைக்கவில்லை எனவும், விளக்கமறியலில் உள்ள சிலரும் கடவுச் சீட்டை இதுவரை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

2022 மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்களான பவித்ரா வன்னி ஆரச்சி,  ஜோன்ஸ்டன் பெர்ணன்டோ, காஞ்சன ஜயரத்ன , நாமல் ராஜபக்ஷ, ரோஹித்த அபே குணவர்தன, சி.பி. ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான  சஞ்ஜீவ எதிரிமான்ன, சம்பத் அத்துகோர  ஆகியோரும்  ரேணுக பெரேரா ஆகிய 9 பேருக்கும்  நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை விதித்தது.

 அத்துடன்  அமைதி  போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்த,  நிசாந்த ஜயசிங்க,   அமித்த அபேவிக்ரம,  புஷ்ப லால் குமார, மஹிந்த கஹந்தகம,  திலிப் பெர்ணான்டோ ஆகியோரின் வெளிநாட்டு பயணமும் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனைவிட,   அமைதி ஆர்ப்பாட்டங்கள் மீது  நடாத்தப்பட்ட தாக்குதல்கள் பதிவான  பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த நிலையில்,  கடமையை சரியாக செய்து வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறப்படும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வெளிநாட்டுப் பயணமும் நீதிமன்றால் தடை செய்யப்பட்டது. 

வன்முறைக் கும்பலுடன் வந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்தவுடன் ஒன்றாக  சினேகபூர்வமாக  கலந்துரையாடியவாறு முன்னேறும் புகைப்பட சான்றுகள் இருக்கும் நிலையில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  இதனைவிட இந்த விசாரணைகளுக்கு அவசியமான சாட்சியாளர்கள் 7 பேரான ( காயமடைந்தவர்கள், கண் கண்ட சாட்சியாளர்கள்) நோனா மொரின் நூர்,  எட்டம்பிட்டிய சுகதானந்த தேரர், கல்பாயகே தொன் அமில சாலிந்த பெரேரா,  சேதானி சத்துரங்க,  பீரிஸ்லாகே அமில ஜீவந்த,  கொடித்துவக்குகே ஜகத்  கொடித்துவக்கு , மொஹம்மட் ஷேர்மி ஆகியோரினதும் வெளிநாட்டுப் பயணங்கள் கடந்த மே 12 ஆம் திகதி தடை செய்யப்பட்டன.

 அது முதல் இதுவரை முன்னாள் பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ அவரது கடவுச் சீட்டினை நீதிமன்றுக்கு ஒப்படைக்க தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34