பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை

Published By: Digital Desk 4

08 Jun, 2022 | 09:29 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் உலக உணவுச் செயற்திட்டம் ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அமைப்புக்களும் இணைந்து எதிர்வரும் ஜுன் - செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பு நிலை எத்தகையதாகக் காணப்படும் என்பது குறித்து வெளியிட்டுள்ள 'பட்டினி மேலோங்கல் அபாய அறிக்கையிலேயே' மேற்கண்டவாறு இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இவ்வருடம் மேமமாதம் வெளியிடப்பட்ட 'பட்டினி மேலோங்கல் அபாய அறிக்கையின்' பிரகாரம் எதியோப்பியா, நைஜீரியா, தென்சூடான் மற்றும் யேமன் ஆகிய 4 நாடுகளும் பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளாகத் திகழ்வதுடன், குறிப்பிடத்தக்களவு அபாயம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் இணைந்திருக்கின்றன.

எதியோப்பியா, யேமன், தென்சூடான், சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 750,000 பேர் வரையில் பட்டினிக்கும் உயிரிழப்புக்களுக்கும் முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படக்கூடும்.

அதேவேளை கடந்த ஜனவரி மாதம் வெளியான அறிக்கையில் மிகமோசமடைந்துவரும் நிலைவரங்களின் காரணமாக உயர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளின் பட்டியலில் கொங்கோ, ஹெய்ட்டி, சாஹெல் பிராந்தியம், சூடான், சிரியா ஆகிய நாடுகள் உள்ளடங்கியிருந்ததுடன், தற்போதை அறிக்கையின் பிரகாரம் அப்பட்டியலில் கென்யாவும் இணைந்துகொண்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளின் பட்டியலில் அங்கோலா, லெபனான், மடகஸ்கார், மொஸாம்பியா ஆகிய நாடுகளுடன் தற்போது இலங்கை, மேற்கு ஆபிரிக்கா, உக்ரேன் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளும் இணைந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15
news-image

மக்களுடைய கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை...

2023-10-03 16:13:50