பெருந்தோட்டத்தில் பயன்படுத்தப்படாத காணிகளை  விவசாயத்துக்காக வழங்கும் பிரதமரின் அறிவிப்பு உத்தியோகபூர்வமாக்கப்பட வேண்டும் -  இராதாகிருஷ்ணன்

Published By: Vishnu

08 Jun, 2022 | 09:43 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்டப் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்திற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான பிரதமரின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே,இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 08 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரை மற்றும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்திற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான பிரதமரின் தீர்மானத்தை தோட்ட நிர்வாகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 அவ்வாறு இல்லாவிட்டால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை ஏமாற்றி விடுவார்கள். உதாரணத்திற்கு தொழிலாளர்கள் தமது வீட்டை ஒரு அடி நகர்த்தி கட்டினாலே வழக்கு, வேலை நிறுத்தம் என தோட்ட நிர்வாகம் புறப்படுகிறது.

அதனைக் கருத்திற்கொண்டு தோட்ட நிர்வாகத்துக்கு முறையாக அறிவித்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு அவ்வாறான காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  

அதேபோன்று நாட்டின் ஏனைய விவசாயிகளுக்கு வழங்க தீர்மானித்துள்ள வங்கிக் கடனை அறவிடாமல் விடும் சலுகையை தோட்டப் பகுதி விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் தற்போது பொருளாதார சீரழிவு, அரசியல் சீரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்து சமூக, கலாசார சீரழிவு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. நாட்டில் தற்போது வன்முறை, கொலை, கொள்ளை, சிறுவர்களை கடத்துதல்  போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் அரசியல் நெருக்கடி தீர்க்கப்படாவிட்டால் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது. மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதனால் அவர்கள் பாடசாலைக்குப் போக முடியாத நிலையில் தொழில்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். ஒரு நாட்டின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது. அவ்வாறு மாணவர்கள் தீர்மானித்தால் நாட்டின் எதிர்காலம் சூனியமாகிவிடும்.

அதேபோன்று கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதாகவும் 50 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து கோதுமை மா மானிய விலையில் வழங்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது எதுவுமே  தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அத்தகைய வாக்குறுதிகளை வழங்கிய அரசியல்வாதிகளும் இன்றில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07