மட்டக்களப்பில் இடம்பெற்ற தீவைப்பு சம்பவங்கள் - கைதான 21 பேருக்கும் விளக்கமறியல்

By T Yuwaraj

08 Jun, 2022 | 09:51 PM
image

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு மற்றும்  ஆடைத்தொழிற்சாலை உடைத்து சோதப்படுத்திய சம்பவம் தொடர்பாக  மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட 21 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுவா நீதிமன்ற நீதிபதி இன்று புதன்கிழமை (08) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 10 ஆம் திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம் வீடு அவரது உறவினாரின் வீடு ஹோட்டல் கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத் தொழிற்சாலைகளை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குமுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் 16 வயதுடைய 2  சிறுவர்கள் உட்பட 24 பேரை இதுவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 16 வயதுடைய இரு சிறுவர்கள்  உட்பட 3 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 21 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுடைய வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை 14 நாட்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right