பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சந்தேகநபர் துப்பாக்கியுடன் கைது

Published By: Vishnu

08 Jun, 2022 | 09:54 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு, அவர்களின் வாகனங்களுக்கு தீவைத்த சந்தேகநபரொருவர் பொலிஸாரின் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பு - பஞ்சிகாவத்தை சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்   நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம் குறித்த பகுதியில் சென்று கொண்டிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி , அவர்களது உத்தியோகபூர்வ வாகனங்களிலுள்ள உதிரப்பாகங்களை அகற்றி வாகனத்திற்கு தீமூட்டியமை தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பிரதேசத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு - 11 , லக்ஷசெவன குடியிருப்பு பகுதியில் 18 வயதுடைய நபராவார். இவரிடமிருந்து பொலிஸாருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ துப்பாக்கியொன்றும் , அதற்கு பயன்படுத்தப்படும் 20 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக தண்டனை சட்டக்கோவை, பொதுசொத்துக்கள் சட்டம், துப்பாக்கிக் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50