(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)
இனவாத கொள்கையினால் பகைத்துக்கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருளை கொள்வனவு செய்ய முடிந்தால் எரிபொருளுக்காக செலவு செய்யும் டொலரை பிறிதொரு தேவைக்கு பயன்படுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர்கூறுகையில் ,
பாராளுமன்ற கூட்டத்தொடரில் இல்லை,முடியாது,தீவிரமடையும்,பொருத்துக்கொள்ள வேண்டும் என்ற வார்த்தைகளை மாத்திரமே கேட்க முடிகிறது.
வீட்டில் இருந்தாலும்,வெளியில் சென்றாலும் நெருக்கடி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.பிரச்சினைகளுக்கு தீர்வையே மக்கள் கோருகிறார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் போது சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்த்தோம்.
ஆனால் தற்போது எந்த நாடும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.எனவே இனவாத பேச்சுக்களினால் பகைத்துக்கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
மருந்து தட்டுப்பாட்டை வெற்றிக்கொள்ள அரசாங்க மருந்தக கூட்டுத்தாபனம் வசம் உள்ள டொலர் பயன்படுத்தப்பட வேண்டும்.
எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் மக்கள் அமைதிடைவார்கள்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தியடையும்.ஆகவே மூக்கில் அழுவதை நிறுத்தி விட்டு சிறந்த திட்டங்களை முறையாக செயற்படுத்துங்கள்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பொது மக்களின் எண்ணிக்கை குறைவடைந்தவுடன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் முடிவடைந்து விட்டது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் மனங்களில் உள்ளது.மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிடின் இரண்டாவது சுனாமி அலைபோல் பாரிய தாக்கத்தை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM