இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு ரஷ்யாவிடம் சுதந்திரக் கட்சி வேண்டுகோள்

By Vishnu

08 Jun, 2022 | 08:51 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மக்களுக்கு இயன்ற உதவிகளை வழங்குமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் 07 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளித்து அவற்றுக்கு தீர்வினை வழங்குவதற்காக நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை நியமித்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து மத்திய குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. 21 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

ரஷ்ய ஜனாதிபதிக்கு என்னால் எழுத்தப்பட்ட கடிதம் இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தூதுவரை சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் போது நாட்டு மக்களுக்கான உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படும். அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு செய்யக் கூடிய அனைத்து சேவைகளையும் முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right