இந்தியாவைத் தவிர எந்த நாடும் உதவிசெய்ய முன்வரவில்லை ; நாட்டை முடக்கினால் எதையும் செய்ய முடியாது -  பிரதமர் ஆதங்கம்

Published By: Digital Desk 3

08 Jun, 2022 | 08:50 PM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகள் எதுவும் உதவி செய்ய முன் வரவில்லை. இந்தியக்  கடனுதவித்  திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

இந்தியாவின்  உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள  பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை நாட்டை முடக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் எதனையும் மேற்கொள்ள  முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் 

உதவிகளை வழங்க  பெரும்பாலானோர் தயாரில்லை.நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள வேண்டுமாயின் பாராளுமன்றம் முதலில் ஒரு நிறுவன அடிப்படையில் செயற்பட  வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் புதிதாக ஏதும் குறிப்பிட விரும்பில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளேன். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் ஏனைய நாடுகளின் உதவிகளையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் செயற்திட்டத்தை எதிர்வரும்  மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் புதிய கொள்கைக்கமைய செயற்பட வேண்டும். நெருக்கடி நிலைமையில் இருந்து மீள வேண்டுமாயின் புதிய கொள்கைகள் செயற்படுத்தல் அவசியமாகும் நாட்டில். எரிபொருள் இல்லை, நிலக்கரி இல்லை எந்த நாடும் இவற்றை கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்கவில்லை.

இந்தியா மாத்திரமே  தற்போது உதவி வழங்குகிறது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ்  அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் என்பன  பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

இந்திய கடனுதவி திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தியாவின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள் என  வலியுறுத்தியுள்ளேன். நாட்டை முடக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் எதற்கும் பொறுப்பு கூற முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59
news-image

ரணிலை காட்டிலும் அநுர அடிபணிந்துள்ளார் -...

2024-12-09 17:07:33
news-image

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக...

2024-12-09 19:33:14
news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22
news-image

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

2024-12-09 17:17:43
news-image

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும்...

2024-12-09 17:30:51