இலங்கை வங்கியானது தொடர்ந்தும் பதினான்காவது முறையாக இலங்கையின் முதற்தர வங்கியாக Brand Finance Lanka நிறுவனத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தேசத்தின் வங்கியாளராக விளங்கும் இலங்கை வங்கியானது, மக்கள் மத்தியிலான செல்வாக்கு, நிதிசார் பலம் போன்ற காரணங்களால் மட்டுமல்லாது நாட்டின் சமூக பொருளாதார இலக்குகளை அடைவதை தனது நோக்காக வரித்துக்கொண்டுள்ளமையினாலும் அனைத்து இலங்கையர்களதும் நம்பிக்கைக்குரிய நிதிசார் பங்காளராக இருப்பதாலுமே நாட்டின் ‘முதற்தரவங்கி’ என்ற அசைக்கமுடியாத இடத்தைத் தக்கவைத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வங்கியின் தலைவர் திரு. காஞ்சன ரத்வத்தை அவர்கள் கூறுகையில், “இலங்கையின் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள வர்த்தக நாமமான இலங்கை வங்கி, வங்கிச் செயற்பாட்டில் பங்கெடுக்கும் அனைவரும் அதன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையிட்டு எப்பொழுதும் நன்றியறிதலைக் கொண்டுள்ளது. 

நாம் கற்பனையிற்கூட எண்ணியிருக்கா இந்நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கை வங்கியாகிய நாம் உங்களின் நம்பகமான நிதிப் பங்காளராக இருப்போம் என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எப்போதும் போல் பாடுபடுவோம் என்றும் எம்மக்களுக்கு வாக்குறுதியளிக்கிறோம். 

இலங்கை வங்கியுடன் இணைந்து இப்பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

வங்கியின் பொது முகாமையாளர் திரு. கே.ஈ.டி. சுமணசிறி அவர்கள் தெரிவிக்கையில் “இலங்கை வங்கி தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதற்தர வங்கியாக தெரிவுசெய்யப்பட்டிருப்பதை ஒப்பற்ற சாதனையாகக் கருதுவதோடு இதற்கு ஊக்கியாக விளங்கும் எங ;கள் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கும்அனைத்துப் பங்கீடுபாட்டாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

எம்மக்களதும் நாட்டினதும் மாறிவரும் தேவைகளை நிறைவேற்றி,எப்போதும்போல மக்களுக்காக உழைப்போம் என வாடிக்கையாளர்களுக்கும் நாட்டுக்கும் உறுதியளிக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

2000இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் இலங்கை வங்கி உலகெங்குமுள்ள தனது 1,400இற்கும் மேற்பட்ட ATM , CRM, CDM இயந்திரங்கள் மூலம் 24 மணித்தியாலங்களும் சேவையாற்றி வருகிறது. 

மேலும்,நாட்டில் 640இற்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள வங்கி, சென்னை, மாலே, ஹீங்ஹீமாலே , சீஷெல்ஸ்  முதலான நகரங்கள்வரை தன் கிளைகளைப் பரப்பியுள்ளதோடு இலண்டன் நகரில் ஓர் முழுநேர வங்கித் துணைநிறுவனம் ஒன்றையும் நடாத்தி வருகிறது.

வங்கியானது 2022 மாச் மாத நிலவரப்படி 4 ட்ரில்லியன் ருபாய்க்கும் அதிகமான சொத்துத் தளத்தையும் 3.1 ட்ரில்லியன் ருபாய்க்கும் அதிகமான வைப்புத் தளத்தையும் 2.4 ட்ரில்லியன் ருபாய்க்கும் அதிகமான கடன் ஏட்டையும் கொண்ட வலுவானதோர் ஐந்தொகையினை கொண்டுள்ளது.

துவண்டு விழுந்திருக்கும் இலங்கைப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் பொருட்டு வங்கி அதன் வெளிநாட்டு வலையமைப்பின் ஊடாக வெளிநாட்டுப் பண அனுப்பல்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. 

அந்த வகையில் பயனாளிகளுக்கு வங்கி முறையின் மூலம் சிரமங்களேதுமற்ற பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்ததோடு இன்னும் ஒரு படி மேலே சென்று, வங்கி முறை மூலம் பணம் அனுப்பும் வெளிநாட்டவர்களை ஊக்குவிக்கும் சிறப்புத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

82 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நம்பகமான நிதிப் பங்காளராக இருந்து வரும் இலங்கை வங்கி ஐக்கிய இராச்சியத்தின் “The Banker”சஞ்சிகையால் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாகவும் 2021ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ஆகச்சிறந்த வங்கியாகவும் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு “LankaPay Technnovation Awards 2022” நிகழ்வில் வங்கிகளுக்கிடையிலான டிஜிற்றல் முறைக் கொடுப்பனவுகளில் சிறந்து விளங்குகின்றமையை முன்னிட்டு ‘டிஜிற்றல் ஹீரோ’ என விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இவ்வண்ணம், ‘இலங்கை வங்கி’ என்ற வணிக நாமம் “தேசத்தின் வங்கியாளர்கள்" என்ற வகையில் நாட்டின் சமூக பொருளாதார நிலைமையை வங்கி முறைமைக்கூடாகக் கட்டியெழுயெழுப்ப அயராது உழைத்து வருகிறது.