பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறுப்புக்கூறல்  மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடிய வகையிலான எவ்விதமான நெருக்கடிகளும் அரசாங்கத்துக்கு ஏற்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இடையில்  மிகப்பெரிய நெருக்கடிகள் எதுவும் இல்லை.   அவை அனைத்தையும் சமாளித்துக்கொண்டு நாங்கள் அரசாங்கத்தை கொண்டு செல்வோம் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவிதாரண தெரிவித்தார்.