உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான கண்டியைச் சேர்ந்த நபருக்குப் பிணை

By T Yuwaraj

08 Jun, 2022 | 08:48 PM
image

உயிர்த்த  ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாகச் சந்தேகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த கண்டியைச் சேர்ந்த முகம்மது பாறுக் முகம்மது ஹிலாமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். என் .அப்துல்லாஹ் இன்று புதன்கிழமை (08)  பத்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை என்ற நிபந்தனையில் பிணையில் விடுவித்துள்ளார். 

ஸஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2019.5.4 ஆம் திகதி கண்டியில் வைத்து முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் சி.ஜ.டி.யினரால் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு இவருக்கு எதிராகக் கண்டி மேல் நீதிமன்றத்திலும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் கண்டி மேல் நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேவேளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இவர் சார்பாகச் சட்டத்தரணி இஸ்மாயீல்  உவைஸுல் ரஹ்மான் ஆஜராகி இவரைப் பிணையில் விடுவிப்பதற்கான முன் நகர்த்தல் பத்திரம்  கடந்த திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டு இன்று புதன்கிழமை (08) வழக்கு விசாரணைக்காக  மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி; என்.எம். என் . அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டது. 

இதன் போது சட்டமா அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவந்த அரச சட்டவாதி எம்.ஏ.எம். லாபீர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்குப் பிணை வழங்கச் சம்மதம் தெரிவித்ததையடுத்து, பத்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை, ஆகிய நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right