தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­பி­யன்ஷிப் இந்­தி­யாவின் கேரள மாநிலம் திரு­வ­னந்­த­பு­ரத்தில் இன்­றைய தினம் ஆரம்­ப­மா­கின்­றது.

இப்­போட்டித் தொடரின் முதல் போட்­டியில் இலங்கை அணியும் நேபாள அணி யும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன. இந்த போட்டி இன்று பிற்­பகல் 3.30 மணிக்கு திரு­வ­னந்­த­புரம் சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் ஆரம்­ப­மா­கின்­றது.

பாகிஸ்தான் அணி இந்தத் தொட­ரி­லி­ருந்து இறு­தி­நே­ரத்தில் காரணம் கூறாது வில­கிய நிலையில், இலங்கை, இந்­தியா, மாலை­தீவு நேபாளம் ஆப்­கா­னிஸ்தான் பூட்டான் பங்­க­ளாதேஷ் ஆகிய 7 நாடு­களே இம்­முறை தொடரில் பங்­கேற்­கின்­றன.

ஏ பிரிவில் இலங்கை இந்­தியா நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்­பெற்­றி­ருந்­தன. இதில் பாகிஸ்தான் வில­கிய நிலையில் ஏ பிரிவில் மூன்று நாடு­க­ளுக்­கி­டையே தான் போட்டி நடை­பெ­ற­வுள்­ளது.

பி பிரிவில் பங்­க­ளாதேஷ் பூட்டான் மாலை­தீவு மற்றும் ஆப்­கா­னிஸ்தான் ஆகிய அணிகள் இடம்­பெற்­றுள்­ளன.

அதே­வேளை இன்று மாலை 6.30 மணிக்கு இந்­தியா , பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடை­பெ­ற­வி­ருந்­தது. கிரிக்­கெட்டில் மட்­டு­மல்­லாது எந்தப் போட்­டியில் இவ்­விரு அணிகள் மோதி­னாலும் பர­ப­ரப்­புக்கும் விறு­வி­றுப்­புக்கும் பஞ்­ச­மி­ருக்­காது. ஆனால் பலத்த எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் அட்­ட­வ­ணை­யி­டப்­பட்­டி­ருந்த போட்டி பாகிஸ்தான் அணி தொட­ரி­லி­ருந்து வில­கி­ய­மையால் கைவி­டப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச கால்­பந்­தாட்ட தர­வ­ரி­சையில் இலங்கை அணி 194ஆவது இடத்­திலும் நேபாள அணி தர­வ­ரிசைப் பட்­டி­யலில் 192 ஆவது இடத்தில் இருக்­கி­ன்றன. இரண்டு இடங்கள் பின்­தங்­கி­யுள்ள இலங்கை அணி இன்­றைய முதல் போட்­டியில் நேபாளத்தை வீழ்த்தி சாதிக்­குமா என்­பதைப் பொறுத்­தி­ருந்து பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

மேலும் இன்­றை­ய­தினம் நேபா­ளத்­துடன் மோதும் இலங்கை அணிக்கு அடுத்த போட்டி இந்­தி­யா­வுடன் நடை­பெ­ற­வுள்­ளது. இப்­போட்டி 25ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருக்­கி­றது. பாகிஸ்தான் இந்தத் தொட­ரி­லி­ருந்து வில­கிய நிலையில் ஏ பிரிவில் இடம்­பெற்ற ஏனைய மூன்று அணி­க­ளுக்கு தலா ஒவ்­வொரு புள்­ளிகள் வீதம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.