(எம்.வை.எம். சியாம்)
நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் எவ்வாறான அரசியல் மறுசீரமைப்பு முயற்சியிலும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையினரான மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் உடனடியாக பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே அதனை உறுதி செய்யும் வகையில் தேசிய ஆணைக்குழுவை நிறுவுங்கள் என ஊனமுற்றோர் அமைப்புகளின் ஒன்றிணைந்த முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊனமுற்றோர் அமைப்புகளின் ஒன்றிணைந்த முன்னணி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் அதன் செயலாளர் ரசாஞ்சின பத்திரன கருத்து தெரிவிக்கையில்,
மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் 1996 இலங்கையில் கொண்டு வரப்பட்டது. 2003 ஆம் ஆண்டு தேசிய கொள்கை அறிமுகப்படுத்தப் ட்டது.
அமைச்சில் பல பொறிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று அவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.
நாட்டில் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் வாழ்கிறார்கள். அவர்களில் 57 வீதமானோர் பெண்கள். இவர்களுள் 71 வீதமானோர் வாழ்வாதார தொழில் ஈடுபட முடியாத மோசமான வறுமைக்கு உட்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு உரிய தனித்துவமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் ஆற்றலும், உறுதியும் இருப்பதனால் தேசிய ஆணைக்குழு அமைப்பதே நாம் பின்பற்றக்கூடிய ஒரே ஒரு மாற்றுத் தீர்வாகும்.
அதன்படி, ஒவ்வொரு அமைச்சிலும் ஊனமுற்றோருக்கான மையம் ஒன்றை அமைக்க வேண்டும். பாராளுமன்றத்தில் 21 வது திருத்தத்தில் ஊனமுற்றோர்களுக்கான சுயாதீனமான தேசிய ஆணை குழுவொன்றை அமைக்க முன்மொழிவு கொண்டு வர வேண்டும்.
குறித்த ஆணைக்குழுவின் கட்டமைப்பில் அனைவரும் ஊனமுற்றோராக அமைதல் வேண்டும். தலைவர் உட்பட மூவர் அடங்கிய குழுவாகவும் அதில் பெண் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
நாடு என்ற வகையில் உள்நாட்டில் மேற்கொள்ளக் கூடிய இந்த சிறந்த மாற்றத்துக்கான இக்கோரிக்கைக்கு நிபந்தனையின்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரிடமும் இந்த நாட்டில் வாழும் இயலாமையுடைய நபர்களின் அமைப்புகள் சார்பாக நாம் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்றார்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM