கண்டி கலஹா, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 2 ஆம் திகதி வியாழக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது.
10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குடபவனி இடம்பெறுவதுடன் 11 ஆம் திகதி சனிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு 108 கலசாபிஷேகம் இடம்பெறுவதுடன் 9.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் அலங்கார சித்திரத் தேரில் பரிவார முத்திகளான ஸ்ரீ விநாயகப் பெருமான், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுடன் இணைந்து மங்கள வாத்தியங்கள் முழங்க தேரேறி வெளி வீதி உலா வருவார்.
12 ஆம் திகதி காலை 9 மணியளவில் பிராயச்சித்த அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் மாலையில் மாவிளக்கு பூஜையும் மாலை 6.30க்கு தீச்சட்டி பவனியும் இடம்பெறவுள்ளன.
13 ஆம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வைரவர் சாந்தி பூஜையும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM