(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)
ரயில் கட்டணம் தொடர்பில் பொதுக் கொள்கை ஒன்று செயல்படுத்தப்பட வேண்டும். பேரூந்து கட்டணத்தின் அரைவாசிப் பகுதியாக ரயில் கட்டணம் காணப்பட வேண்டும்.
எரிபொருள் விலையேற்றத்திற்கமைய ரயில் கட்டணம் திருத்தம் செய்யப்படாவிடில் ரயில் சேவையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் கடினமானதாக அமையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் புதன்கிழமை (8) சபாநாயகர் தலைமையில் கூடிய போது, பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த போக்குவரத்து அமைச்சரிடம் கடந்த காலப்பகுதியில் பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுப்பட்ட ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்வைத்த கோரிக்ககைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைககள் என்ன,?
முன்னறிவித்தலின்றிய வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படும் ரயில் தொழிற்சங்கத்தினருக்கு எதிரான முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன ? மற்றும் புகையிரத கட்டணம் திருத்தம் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என முன்வைத்த வாய்மொழி கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்து கூறுகையில் ;
கடந்த காலங்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்ட ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் 20 பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டு,ஒரு சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதான ரயில் நிலைய பொறுப்பதிகாரி ,மாவட்ட போக்குவரத்து பரிசோதகர்,உதவி போக்குவரத்து பரிசோதகர் பதவிக்கான நியமனத்தின் ஒரு சில விடயதானங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் மாவட்ட போக்குவரத்து பரிசோதகர் பதவிக்கான நியமனத்தின் போது போட்டிப்பரீட்சையை நடாத்தமலிருத்தல் உள்ளிட்ட இரு பிரதான கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் முன்வைத்துள்ள சகல கோரிக்கைகளும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் உதவி போக்குவரத்து அதிகாரி பதவிக்கான நியமனத்தின் விடயதானம் திருத்தம் செய்யப்படாத நிலையில் இரண்டு திறந்த பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமை,திறமையின் அடிப்படையில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கான போட்டிப்பரீட்சையினை காலம் தாழ்த்தியுள்ளமை தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த பதவி நியமனத்திற்கான போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளமை ஆகவே மீண்டும் விண்ணப்பம் கோரல் தொடர்பில் அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்திகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி,பதவி உயர்வு தொடர்பில் பொது கொள்கையினை செயற்படுத்தமாறு அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.அரச சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கமைய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளதால் நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
பொது பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்குவம் வகையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட வேண்டாம் என ரயில் சேவையில் ஈடுப்படும் சகல தொழிற்சங்களிடமும் பணிவுடன் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை தொழிற்சங்கத்தினர் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக:;கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
ஆகவே முன்னறிவித்தலின்றிய பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதை நாட்டு மக்களை கருத்திற்கொண்டு தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் ஆசன ஒதுக்கீடு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து புகையிரத சேவைக்கான டீசல் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டீசலுக்காக செலவாகும் வீதம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான கடுகதி ரயில் சேவையை இரவு வேளையில் ஆரம்பிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு -யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவைக்கு தேவையான எரிபொருளுக்கு மாத்திரம் 13 இலட்சம் செலவாகுகிறது.
உதாரணமாக கொழும்பு -யாழ் கடுகதி ரயில் சேவைக்கு ஒரு பயணத்தின் போது 500 பேரிமிருந்து 2000 ரூபா அறவிடும் போது 10 இலட்சம் ஈட்டப்படுகிறது.ஆகவே ஒரு பயணத்திற்கு 13 இலட்சம் செலவு செய்து 10 இலட்சம் பெறுகையில் அதனை எவ்வாறு ஈடு செய்ய முடியும். ஒரு பயணத்தின் போது மாத்திரம் 3 இலட்சத்தை ரயில் திணைக்களம் நட்டமாக எதிர்க்கொள்ள நேரிடுகிறது.
பயணிகள் ரயில் சேவை கட்டணம் தொடர்பில் பொது கொள்கை செயற்படுத்த வேண்டும்.பேருந்து கட்டணத்திற்கு அரைவாசி கட்டணமாக புகையிரத கட்டணம் காணப்பட வேண்டும். பேருந்து கட்டணம் 100 ரூபாவாக காணப்படுமாயின் ரயில் கட்டணம் 50 ரூபாவாக திருத்தம் செய்ய அவதானம் செலுத்த வேண்டும். என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM