இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை -கட்டார் தூதுவர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் வழங்கிய உறுதி

By T Yuwaraj

08 Jun, 2022 | 01:41 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார பின்னடைவை எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , இலங்கைக்கான கட்டார் தூதுவருக்கு விளக்கமளித்துள்ளார்.

கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சோரூர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கை - கட்டார் இருதரப்பு உறவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்திய கட்டார் தூதுவர், இலங்கைக்கு வழங்கப்படக் கூடிய சாத்தியமான அனைத்து ஆதரவுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right