மெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு ; மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

08 Jun, 2022 | 12:19 PM
image

மெக்சிக்கோ நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக நேற்று மத்திய மெக்சிக்கோ பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்த பாடசாலை மாணவர்கள் மீது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

அதில் 5 மாணவர்கள் மற்றும் 65 வயதுடைய பெண் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்னனர்.

இறந்த மாணவர்கள் அனைவரும் 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட உயர்நிலை பாடசாலை மாணவர்களாவார். 

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களை மெக்சிக்கோ பொலிஸார் தேடி வருகிறார்கள். 

பாடசாலை மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மெக்சிக்கோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right