பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மெகான் தம்பதியின் புதல்வியான லிலிபெட் தனது முதலாவது பிறந்த தினத்தை இங்கிலாந்திலுள்ள வின்ட்ஸர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை (7) தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளவசர் ஹரி மெகானைக் காதலித்து திருமணம் செய்து அவரது வேண்டுகோளின் பேரில் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று வாழ ஆரம்பித்தது முதற்கொண்டு அவரது அரச குடும்ப அந்தஸ்துடன் சார்ந்த முக்கியத்தவம் குறைந்து வருகிறது. அந்த வகையில் அவர் பிரித்தானிய மகாராணியார் ஆட்சிப் பொறுப்பேற்று 70 ஆண்டுகளாவதைக் குறிக்கும் வகையில் அண்மையில் இடம்பெற்ற கொண்டாட்டங்களில் சிரேஷ்ட அரச குடும்பத்தினர்களது வரிசையில் அல்லாது பின் வரிசையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரித்தானிய எலிஸபெத் மகாராணியார் தனது பூட்டியான லிலிபெட்டை முதல் தடவையாக சந்திக்கும் புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுப்பதற்கு தடை விதிதத்தாகவும் இதனால் மெகான் கடும் சினமடைந்துள்ளதாகவும் சுயசரிதை எழுத்தாளர் ஒருவர் உரிமைகோரியுள்ளார்.
இந்நிலையில் லிலிபெட்டிற்கு பிறந்தநாள் பரிசுகள் பலவும் வழங்கப்பட்டதுடன் பிரித்தானியாவிலுள்ள அவரது ஆதரவாளர்கள் அவரது பிறந்த தினத்தையொட்டி 100,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை தொண்டு ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
மேற்படி பிறந்ததின நிகழ்வையடுத்து இளவரசர் ஹரி, மெகான் தம்பதியினர் தமது பிள்ளைகள் சகிதம் அமெரிக்கா பயணமானார்கள்.
இந்நிலையில் லிலிபெட்டின் பிறந்ததினத்தையொட்டி இளவரசர் ஹரி மற்றும் மெகானால் வெளியிடப்பட்ட அவரது புகைப்படத்தை இங்கு காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM