உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் -  கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 51 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

07 Jun, 2022 | 02:59 PM
image

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தமை தொடர்பாக சந்தேகத்தில்; கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும்  எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதபதி பீற்றர் போல் இன்று செவ்வாய்க்கிழமை (07) உத்தரவிட்டார். 

கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில்; காத்தான்குடியை சேர்ந்தவர்கள், ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட  69 பேரை கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிசார் வழக்கு தாக்குல் மேற்கொண்ட நிலையில் குறித்த அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

இதில் ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள்; நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து 51 பேர் தொடர்ந்தும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதபதி முன்னிலையில்  இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக  அழைத்துவரப்படாத நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் பாதுகாப்புடன்  அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 51 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43