யாழ். பருத்தித்துறையில் குளவி கொட்டியதில் முதியவர் உயிரிழப்பு

By Vishnu

07 Jun, 2022 | 03:11 PM
image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த சூசைப்பிள்ளை சகாயராசா (வயது64) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில் மயக்க மடைந்த முதியவரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right