(எம்.மனோசித்ரா)
நாட்எல் இவ்வாண்டிலும், 2023 ஆம் ஆண்டிலும் 800 000 ஹெக்டயர் நெற்செய்கை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான 150 000 மெட்ரிக் தொன் யூரியா, 45 000 மெட்ரிக் தொன் மியுரேட் ஒஃப் பொஸ்பேற், 36000 மெட்ரிக் தொன் ட்ரிபல் சுப்பர் பொஸ்பேற் உரங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த உரத்தொகையை வரையறுக்கப்பட்ட லங்கா உரக்கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதே போன்று இவ்விரு ஆண்டுகளிலும் பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தினைக் இறக்குமதி செய்வதற்காக 55 மில்லியன் டொலர் கடன் தொகையை இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிடமிருந்து (இந்திய எக்ஸிம் வங்கி) பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM