பாட்டும் பரதமும் - மகளிர் தின நிகழ்வு

By Nanthini

07 Jun, 2022 | 12:10 PM
image

மா. உஷாநந்தினி

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் மகளிர் தின விழா – 2022 கடந்த மே 28ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த விழாவில் பண்ணிசை மற்றும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

ஒரே இசைக் குடும்பத்தைச் சேர்ந்த திரு. ரகுநந்தனன் ராஜநாராயணன் (மிருதங்கம் - அப்பா), திரு. ராஜலிங்கம் ரகுநந்தனன் (கடம் - மகன்) மற்றும் வயலின் இசைக்கலைஞர் திருமதி. மதுரா பாலசந்திரனின் பக்க வாத்திய இணைவோடு செல்வி. அபிராமி ரகுநந்தனன் (மகள்) 'நின்னையே ரதியென்று.....', 'நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்...' முதலிய பாரதியார் பெண் எழுச்சிப் பாடல்களை பாடினார். 

தொடர்ந்து, ஸ்ரீமதி சாந்தி கணேசராஜாவின் 'நிருத்திய நர்த்தனாலய நடனக்கலை' மன்றத்தின் மாணவியர் 'சின்னஞ்சிறு கிளியே....', 'சின்னஞ்சிறு பெண் போலே....', 'ஜெய ஜெய தேவி...' ஆகிய பெண்ணியல் பாடல்களுக்கு நிகழ்த்திய நடன ஆற்றுகைகளையும் படங்களில் காணலாம். 

இந்நிகழ்வை தலைமையேற்ற சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு தமிழ்ச் சங்க துணைத்தலைவருமான திருமதி. ஜெயந்தி விநோதன் மற்றும் பிரதம விருந்தினராக வருகை தந்த சைவ மங்கையர் கழக துணைத்தலைவர் - சிரேஷ்ட சட்டத்தரணி மாலா சபாரட்ணம் ஆகியோர் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கிய இளம் கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.

படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right