அடுத்த 3 வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக அமையும் - பிரதமர்

By T. Saranya

07 Jun, 2022 | 12:01 PM
image

நாட்டில் அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும்  என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும்.  எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருளாதார நெருக்கடிக்கு போராட்டங்களினால் தீர்வுகாண முடியாது. புத்திசாலித்தனமான திட்டங்களினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். 

தவறான ஒருசில தீர்மானங்களினால் சர்வதேசத்தில் இருந்து புறக்கணிக்கும் நிலையில் இலங்கை உள்ளது. எனவே   தவறான தீர்மானங்கள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right