குமார் சுகுணா
உலகமெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இல்லையே என்ற குறையை கைலாசாவை உருவாக்கி நித்தியானந்தா நிவர்த்தி செய்துவிட்டார் என பரவசம் அடைந்தவர்கள் பலர்.

கைலாசா எங்கே இருக்கிறது.. நாமும் அங்கே வந்துவிடுகின்றோம் வழி சொல்லுங்கள் குருநாதரே என்று கேட்டவர்களும் பலர். அதற்கு நித்தியானந்தா வழியும் கூறினார். அவுஸ்திரேலியாவுக்கு வந்து விட்டால் அங்கிருந்து கருடா எனும் சிறிய ரக விமானம் மூலம் கைலாசா வந்துவிடலாம் என்று..

இந்தியாவில் பல வழக்குகளில் நித்தியானந்தா தேடப்படுபவராக இருந்தாலும் அவர் இந்தியாவை விட்டு கைலாயா என்ற நாட்டை உருவாக்கி விட்டதாகவும். அதன் அதிபதி நித்தியானந்தா என்றும் கூறபட்டது. முதல் அவுஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள சிறிய தீவையே நித்தி கைலாசாவாக மாற்றிவிட்டதாக கூறப்பட்டது.
பின்னர், .தென் பசுபிக் கடல் தீவு ஒன்றில் இருப்பதாகவும் மேற்கிந்தியத் தீவுகளின் வட்டாரத்தில் உள்ள ஒரு சிறிய தீவையே நித்தியானந்தா கைலாசா என்று பெயர் சூட்டி அதனை நாடு என்று கூறிவருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இன்று வரை அவர் எங்கே இருக்கிறார் கைலாசா எங்கே இருக்கின்றது என்பது யாருக்கும் தெரியவில்லை.

கடந்த 2018 ஜூன் மாதம் 6-ஆம் திகதி நித்யானந்தாவுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை அவரிடம் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கடந்த 4 வருடங்களாக நித்தி இந்தியாவில் இல்லை.. அவருக்கு எதிராக இன்டர்போல் மூலம் கைது செய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இயற்கையை மிஞ்சும் அளவு சூரிய விடியலையே தனக்கேற்றால் போல மாற்றி அமைப்பதாக கூறிவந்த நித்தியானந்தாவுக்கு உலகலவில் பல கோடி பக்தர்கள் ரசிகர்கள் இருக்கின்றனர். நானே கடவுள் என்றும் இருநூறு வருடங்கள் வாழபோவதாகவும் கூறிவந்தார். அத்தோடு தனது கைலாசா நாட்டுக்கான தனி கொடி, தங்க நாணயம் என அவ்வப்போது பல விடயங்களை இணையத்தில் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

கைலாசாவில் இருந்து கொண்டு பல சொற்பொழிவுகளை இணையத்தில் சமூகலைத்தளங்கள் மூலமாக வெளியிட்டு கொண்டிருந்தவர் இறுதியாக ‘என் அறைக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து என்னுடன் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஊஞ்சலில் படுத்து கொண்டு பனி படர்ந்த மலையையும் கடலையும் ரசிக்கிறேன்' என்று கூறினார். இந்த நிலையில் திடீரென தான் சமாதியில் இருப்பதாக அறிவித்து விட்டார். சிலர் அவர் இற்ந்து விட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் செய்திகளை பரவ விட்டனர்.

உண்மையில் நித்தியானந்தா சமாதியில் இருக்கின்றாரா இல்லை அவருக்கு எதுவும் நோய் தொற்றா என்பதே பலரதும் கேள்வி. அவரது சமூகவவலைத்தள பக்கங்களில் தற்போது அவர் புதிதாக பேசிய காணொளிகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அவர் பொதுவாக உடற்பயிற்சிகள் எதையும் செய்யும் பழக்கத்தைக் கொண்டவர் இல்லை. ஆனால் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பார். அவருக்கு காய்ச்சல் வந்தால் கூட வெளியே தெரியாது. ஏனென்றால் மற்றவர்களின் வியாதியை குணப்படுத்துபவர் எப்படி தனக்கு வந்த வியாதியை வெளியே சொல்லுவார்.

நான் தற்போது சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. பேசும் திறன் இல்லை. சொற்பொழிவாற்ற சில காலம் ஆகும். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிரபஞ்ச சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். 18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது’ என்று அவர் சமூகத்தல பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும் , கடைசியாக அவர் வெளியிட்ட பதிவுகளில் "ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. இருபது நிமிடம்கூட தூங்க முடியவில்லை' என கூறியிருக்கிறார். ஆனால் நான் நல்ல உடல் நிலையில் இருக்கிறேன் சமாதியில் இருக்கிறேன், எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்கூட என்ன வியாதி என்று கண்டுபிடிக்க சிரமப்படுகிறார்கள்'. நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் கேட்ட வரங்கள், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும். நான் சமாதியில் இருக்கும்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன். நான் சமாதியில் இருக்கும்போது வெறுப்பாளர்கள், எதிரிகள் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள் என கூறுகிறார்.
உண்மையில் நித்திக்கு என்ன என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெயிட்டுள்ளது. அதாவது ‘இது பற்றிய உண்மையை சொல்லக்கூடிய ஒரே ஒரு ஆள் ரஞ்சிதா மட்டுமே. அவர் நித்தியுடன் இருக்கிறார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, அளவுக்கு அதிகமான வயாகரா போன்ற மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு சிறுநீரகங்களும் நித்தியானந்தாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை வருடங்களாக நித்தியானந்தாவின் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. அவருக்கு வருமானம் இல்லை. தலைமறைவாக இருக்கும் நித்தியை மருத்துவமனையில் சேர்த்தால் அது செய்தியாகிவிடும். அவரை அவர் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டின் சட்டவிதிகள்படி இந்திய பொலிஸ் சர்வதேச உதவியுடன் கைது செய்துவிடும். அதனால் ஒரு கருணைப் பார்வை அரசாங்கம் தன் மீது காட்டாதா? நான் ஒரு இந்து சாமியார் என மத்திய பா.ஜ.க. அரசுக்கு செய்தி அனுப்ப நித்தி முயல்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவின் பேச்சுக்கள் நமக்கு பொழுது போக்காகவும் நகைச்சுவையாக தெரிந்தாலும். பதினொரு வயதில் அண்ணாமலையில் அண்ணாமலையாரின் அருள் தனக்கு கிடைத்ததாக கூறும் நித்தியானந்தா உலகம் முழுவதும் பலகோடி பக்தர்களையும் நூற்றுக்கணக்கான ஆச்சிரமங்களையும் உருவாக்கி வைத்துள்ளார். இலங்கையில் கூட அவருக்கு ஆச்சிரமங்கள், பக்தர்கள் உள்ளனர். இவர் ஹீலிங் மூலம் நோய்களை குணப்படத்தும் சக்தி மிக்கவர் என்றும் கூறபடுவதுண்டு. உண்மையில் இவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இவரிடம் வரும் பக்தர்களுக்கு நோய்களை குணமாக்கிவிடுவார். அவரது கைகள் பட்டாலே நோய்கள் குணமாகிவிடும் என்று கூறுகின்ற பக்தர்களை பார்க்கின்றோம்.
கடந்த சில வருடங்களாக நித்தியானந்தாவின் உடல் மெலிந்து காணப்பட்டதை நாம் பார்த்திருந்தோம். தனக்கு யாரோ விசம் கொடுத்துவிட்டதாகவும் அதிலிருந்து தான் வெற்றி பெற்று குணம் அடைந்துவிட்டதாகவும். மீனாட்சி தன் பிள்ளையை காப்பாற்றிவிட்டாள் என்றும் நித்தி அப்போது காணொளிகளை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் சமாதி நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது. உண்மையில் அவர் சமாதியில் இருக்கின்றாரா அல்லது நோய்வாய்பட்டு கிடக்கின்றாரா… அவரது சொத்துக்களை அபகரிக்க யாரேனும் மெல்ல கொல்லும் விசத்தை கொடுத்து விட்டனரா என்பது இறைவனுக்குதான் தெரியும்.
எப்படியோ… அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதனால், சட்டத்தின் முன் அவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து போலவே, நித்தி விரைவில் நலம் பெறவேண்டும் என்பது பக்தர்கள் உள்ளிட்ட அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM