(எம்.மனோசித்ரா)
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை சடுதியாக அதிகரித்தமை தொடர்பில் லாப் நிறுவனத்திடம் விளக்கம் கோருமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அத்தோடு உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்து வீடுகளில் சேமிக்க வேண்டாம் என்றும் , இவ்வாறான செய்பாடுகளால் சந்தைகயில் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பினை வழமையைப் போன்று பேண முடியாது என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
திங்கட்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மக்கள் தமக்கு தேவையான உணவு பொருட்களை தேவையானளவிற்கு கொள்வனவு செய்ய முடியும். அதனை விடுத்து அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தால் அது சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களின் வழமையான இருப்பினைப் பேணுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வழமையாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் அரிசி இறக்குமதி செய்யப்படும். எனினும் இவ்வாண்டு இப்போதே அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 6 - 7 மாதங்களுக்கு அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அனுமதியைக் கோர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தளர்த்தப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் விலை அதிகரிப்பக்கள் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற என்பதை வினவும் அதிகாரம் நுகர்வோர் அதிகார சபைக்கு உண்டு. அதற்கமைய லாப் நிறுவனம் எந்த அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்தது என்பது குறித்து விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM