கொழும்பில் துப்பாக்கிச் சூடு : இளைஞன் பலி

06 Jun, 2022 | 06:32 PM
image

கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு -15 அளுத்மாவத்தை, ரெட்பானவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே 23 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right