ஐ.சி.சி. யின் மே மாதத்திற்கான அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கையின் 2 வீரர்களுக்கு

By Digital Desk 5

06 Jun, 2022 | 05:05 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து இலங்கையின் தொடர் வெற்றியில் பிரதான பங்காற்றிய அசித்த டி சில்வா, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரே ஐசிசி மாதாந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதே தொடரில் பங்ளாதேஷ் சார்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த முஷ்பிக்குர் ரஹிமும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அசித்த பெர்னாண்டோ

Oshada Fernando returns for Bangladesh Tests | Cricbuzz.com - Cricbuzz

பங்களாதேஷுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் அசித்த பெர்னாண்டோ மொத்தமாக 13 விக்கெட்களை 16.61 என்ற சராசரியுடன் கைப்பற்றினார். 

சட்டோக்ராம் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்களை மாத்திரம் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ, மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

முதல் இன்னிங்ஸில் 91 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ, 2ஆவது இன்னிங்ஸில் 51 ஓட்டங்களுக்கு 6 விககெட்களை வீழ்த்தினார்.

ஓர் இன்னிங்ஸில் 6 விக்கெட் குவியலும் முழு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் குவியலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதிகளாகப் பதிவாகின.

ஏஞ்சலோ மெத்யூஸ்

SA vs SL: Hamstring injury likely to rule out Angelo Mathews

இலங்கையின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் அனுபவசாலியுமான ஏஞ்சலோ மெத்யூஸ், டெஸ்ட் தொடரில் பங்களாதேஷுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

இரண்டு டெஸ்ட்களிலும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மெத்யூஸ் மொத்தமாக 344 ஓட்டங்களைக் குவித்து 172.00 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருந்தார்.

சட்டாக்ரோமில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 199 ஓட்டங்களைக் குவித்த மெத்யூஸ், மிர்பூரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களைப் பெற்றதுடன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 506 ஓட்டங்களைக் குவிக்க உதவினார். அதன் மூலம் இலங்கையின் தொடர் வெற்றிக்கு அடிகோலி இருந்தார்.

பங்களாதேஷ் வீரர்  முஷ்பிக்குர்   ரஹிமும் இவ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் முதலாவது டெஸ்டில் 105 ஓட்டங்களையும் 2ஆவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களையும் பெற்றார்.

இதேவேளை மாதத்தின் அதிசிறந்த வீராங்கனை விருதுக்கு பாகிஸ்தானின் துபா ஹசன், பிஸ்மா மாறூவ், ஜேர்சி அணியின் ட்ரினிட்டி ஸ்மித் ஆகியோர பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right