தனது சொந்தக்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கின்றார் பொறிஸ்ஜோன்சன் - இன்றுவாக்கெடுப்பு

Published By: Rajeeban

06 Jun, 2022 | 04:44 PM
image

பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனை பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்த அவரது கட்சியினர் இன்று தீர்மானிக்கவுள்ளனர்

இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பில் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

பார்ட்டிகேட் விவகாரத்தை தொடர்ந்தே பொறிஸ்ஜோன்சனின் தலைமைத்துவத்தின் மீது கேள்வி எழுந்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோன வைரஸ் முடக்கல் கால களியாட்ட நிகழ்வுகள் குறித்து சூ கிரே தனது அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வந்துள்ள நிலையில் பொறிஸ்ஜோன்சனை பதவி விலக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கட்சியின் தலைமையை கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் அமைச்சர்கள் பொறிஸ்ஜோன்சனிற்கு ஆதரவாக உள்ளனர்.

கிரேயின் அறிக்கை வெளியானதை  தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக பிரதமரின் எதிர்காலம் குறித்து சந்தேகங்கள் வெளியான நிலையில் நம்பிக்கையில்லாதீர்மானம் குறித்த அறிவிப்புவெளியாகியுள்ளது.

முடக்கல் காலத்தில் பிரதமரின் அலுவலகத்தில் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறித்த இடைக்கால அறிக்கை ஜனவரியில் வெளியானதை தொடர்ந்து பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் அதிகரிக்க ஆரம்பித்தன.

எனினும் கடந்த வாரம் வெளியான முழுமையான அறிக்கை  கொவிட் விதிமுறைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது - இதனை தொடர்ந்து பொறிஸ்ஜோன்சன் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள் தீவிரமடைந்துள்ளது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35