இலங்கை பௌத்த பீடாதிபதிகள் இந்தியாவிற்கு நன்றி

Published By: Digital Desk 3

06 Jun, 2022 | 03:20 PM
image

புத்தர் பிறந்த பூமியை இந்தியாவில் புத்த பூர்ணிமா என்று பிரபலமாக அறியப்படும் வெசாக் போயா தினம், புத்தரின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய மூன்று புனித ஸ்தலங்களில் பிரமாண்டமாகவும் அமைதியாகவும் கொண்டாடப்பட்டது. 

லும்பினி, பௌத்கயா மற்றும் புது டெல்லி  ஆகிய இடங்களில் சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் அனுசரணையுடன் இந்திய  மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.  பிரதமர் நரேந்திர மோடியின் பங்கேற்பு சிறப்பானதொரு விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புத்தரின் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இங்கு இடம்பெற்ற நிகழ்ச்சிகளில், துறவிகள், உயரதிகாரிகள் மற்றும் பௌத்த உலகத்துடன் தொடர்புடைய ஏராளமானோர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்கள் பொதுவாக புத்தரின் வாழ்க்கை, பிறப்பு, ஞானம் மற்றும் போதனைகளைச் சுற்றி உருவானது, உரைகள் இன்றைய உலகத்தின் நிலை மற்றும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியை அடைய புத்தர் போதித்த எட்டு வழிகளை உலகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதிபளிக்கும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

புதுடில்லியில் உள்ள சர்வதேச பௌத்த கூட்டமைப்புக்கு சொந்தமான லும்பினியில் உள்ள இந்திய சர்வதேச புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தை நிர்மாணிப்பதற்கான 'ஷிலான்யாஸ்' விழாவில் பிரதமர் மோடி மற்றும் பிரதமர் டியூபாவுடன் கலந்து கொண்டனர்.

இதே வேளை நான்கு நிகாயாக்களின் பிரதம பீடாதிபதிகளான  ஸ்ரீ அமரபுர மகா நிகாயா அதி வணக்கத்திற்குரிய அக் மகா பண்டித கலாநிதி தொடம்பஹல சந்திரசிறி மகா தேரர், சியாம் மஹா நிகாயாவின் மல்வத்தை பிரிவின் பிரதி பீடாதிபதி வணக்கத்துக்குரிய திம்புல்குபுரே விமலதர்ம மகா தேரர். 

அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி வெண்டுருவே உபாலி அனுநாயக்க தேரர் மற்றும் ஸ்ரீ ராமஞ்ஞ மகா நிகாயாவின் வணக்கத்திற்குரிய அக்க மஹா பண்டித மகுலேவே விமல மகாநாயக்க தேரர்  ஆகியோர் விடுத்துள்ள செய்தியில்,  நெருக்கடி மிக்க  சூழலில் உலகம் முழுவதும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பிற்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்துள்ளனர். 

கொந்தளிப்பு மற்றும் விரோதம். புத்த பூர்ணிமா தினத்தை நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசிற்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் மகத்தான மற்றும் சரியான நேரத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர். 

இலங்கையர்கள் தங்கள் மதம், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை இந்தியாவிடமிருந்து பெற்றவர்கள் என்றும், இந்த உறவும் சகோதரத்துவமும் வலுவிலிருந்து வலுவாக வளர வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டனர்.

பௌத்த தத்துவக் கருத்துக்கள் முழு உலகத்திற்கும் எல்லா நேரங்களிலும் சரியானவை மற்றும் மிகவும் பொருத்தமானவை என்றும், பௌத்தத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் குறித்து மகா சங்கத்தினர் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் அவர்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58