தங்காலை துப்பாக்கிச்சூடு ; சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு

Published By: Digital Desk 5

06 Jun, 2022 | 05:00 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தங்காலை, மொரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,

துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் தங்காலை, மொரகெட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்காலை மொரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்தார்.

கெப் வண்டியில் பயணித்த குறித்த நபரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இதன் போது உயிரிழந்தவர் 40 வயதுடைய குடாவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதேவேளை போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தனிப்பட்ட மோதல்கள் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்று  இருக்கலாம் என்றும் நாட்டில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு போதைப்பொருள் கடத்தல்காரர் களுக்கிடையிலான மோதல்கள் பிரதான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32